உலகக் கால்பந்து அரங்கின் ஈடு இணையற்ற நாயகனாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் சூப்பர் ஸ்டாராகவும் விளங்குபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது விளையாட்டு வாழ்க்கையைப் போலவே, இவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதிலும் உலகளவில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்குத் தனி ஆர்வம் உண்டு.
அந்த வகையில், தனது நீண்டகாலக் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு, உலகெங்கிலும் உள்ள தனது ரசிகர்களுக்குப் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் 41 வயதான இந்த கால்பந்து மாவீரன்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் உள்ள பிரபல ஆடை விற்பனையகத்தில் ஜார்ஜினா பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ரொனால்டோ அவரை முதன்முதலில் சந்தித்தார். அந்தச் சந்திப்பு நாளடைவில் காதலாக மலர்ந்து, கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
ஐந்து குழந்தைகளின் பெற்றோர்களான இந்த ஜோடி, எப்போது முறைப்படி திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கடந்த பல ஆண்டுகளாகவே விளையாட்டு உலகில் நிலவி வந்தது. அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக, போர்த்துகல் நாட்டின் காஸ்காய்ஸ் நகரில் உள்ள எழில்மிக்க கடற்கரை பகுதியில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, இருவரும் தங்களது கைகளில் திருமண மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “C, G” என்று மிகச் சுருக்கமாகப் பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். ரசிகர்கள் பலர் தேவாலயங்களின் முன் திரண்டு காத்திருந்த நிலையில், யாருக்கும் அறிவிக்காமல் அமைதியான முறையில் நள்ளிரவில் இந்தத் திருமணத்தை நடத்தி முடித்துள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆண்டுகாலக் காதல் பயணத்தின் உச்சமாக அரங்கேறியுள்ள இந்த சுபநிகழ்வுக்கு, உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு நட்சத்திரங்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் அன்பையும் இணையத்தில் பொழிந்து வருகின்றனர்.
See this Instagram photo by @cristiano https://t.co/gkNzamzHt6
“>
