ஹைதராபாத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் ஷோரூமிற்குள் வந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்த சோஃபா மற்றும் பெட்களில் தங்களது வீட்டைப் போலப் படுத்துக் கொண்டும், அமர்ந்து கொண்டும் ஓய்வெடுக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியாகி இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்களுடன் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், மஞ்சள் நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் சோஃபா கம் பெட்டில் படுத்துக் கிடக்க, அருகில் ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருக்கிறாள்; சற்று தள்ளி இரு வயதான பெண்கள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு சோஃபாவில் நிதானமாக ஓய்வெடுக்கின்றனர்.
இந்த வீடியோவைப் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், “மக்களுக்குப் பொது அறிவு இல்லாததைத் தாண்டி, நமது மக்கள் எவ்வளவு ஆரோக்கியமற்று இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது; உடற்பயிற்சி இல்லாமல் அதிக சர்க்கரை உணவுகளை உண்பதால் தான் இந்தியர்கள் இப்படி அலைகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவரின் இந்த விமர்சனப் பதிவிற்குப் பெரும்பாலான நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “உலகெங்கிலும் உள்ள கடைகளில் பர்னிச்சர்களை இப்படி அமர்ந்து பார்த்துத்தான் வாங்குவார்கள், இதில் எந்தத் தப்பும் இல்லை; 5 காசு விளம்பரத்திற்காகச் சமூக வலைதளங்களில் சக மனிதர்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்துங்கள்” என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
<a href=”http://
Apart from the obvious lack of civic sense, this is also how unhealthy our population is. This is what happens when you eat a high carb/sugary diet and don’t exercise. Most Indians don’t even walk every day. pic.twitter.com/K3cZQ7RFNy
— Sakshi Narula (@mssakshinarula) June 18, 2026
“>
அதே சமயம் பிரம்மாண்ட கடைகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஓய்வெடுக்கத் தனியாக இருக்கைகள் போடுவதில்லை” என்ற குற்றச்சாட்டுகளும், சுகாதாரம் இல்லாமல் சோஃபாக்களில் அரட்டை அடிக்கிறார்கள்” என்ற விமர்சனங்களும் என இந்த வீடியோ தற்பொழுது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
