தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் புகார்களுக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளது.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும், கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட நீண்ட நாட்கள் நீடித்ததே மின் கட்டணம் அதிகரிக்க முக்கியக் காரணம் என்றும், வீடுகளில் ஏசி மற்றும் மின்விசிறிகள் கூடுதல் நேரம் இயங்கியதால் நுகர்வு இயற்கையாகவே உயர்ந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை வைஷாலி என்பவர் தமக்கு அதிக மின் கட்டணம் வந்ததாக வெளியிட்ட வீடியோ குறித்துப் பேசியுள்ள தரப்பினர், அவர் தனது உண்மையான யூனிட் பயன்பாட்டு விவரங்களை மறைத்துவிட்டுப் புகார் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அரசின் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் குடும்பங்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் குடும்பங்களும் ஒரு ரூபாய் கூட மின் கட்டணம் செலுத்தாமல் முழுமையான பயனைப் பெற்றுள்ளனர் எனப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“>

 

தவறான தகவல்களையும் வதரிகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், மின் நுகர்வு அதிகரிப்புக்கேற்பவே கட்டணம் வந்துள்ளதாகவும் மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.