இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (73) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டம் குறித்த முக்கிய நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழலில் அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் நீரிழப்பு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இந்த நிலையில், தற்போது இன்று நள்ளிரவு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல் ஹாஷோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் நெதன்யாகு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.