டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவிற்கு இடம்பெயர்ந்த தம்பதியினர், தாங்கள் குடியிருந்த வீடு குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் மாதம் 52,000 ரூபாய் வாடகை கொடுத்து 2 பி.எச்.கே வீட்டில் தங்கியிருந்ததாகவும், ஆனால் அந்த வீட்டிற்கு ஏற்ற வசதிகள் நீச்சல் குளம், பூங்கா போன்றவை எதுவுமே இல்லை என்றும் அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
அதிக வாடகை மற்றும் டெபாசிட் இருந்தும், அடிப்படை வசதிகள் கூட இல்லாதது தங்களின் மிகப்பெரிய தவறு என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த தம்பதியினர் வேலையை பொறுத்து நகரத்தின் மையப்பகுதிகளில் அதிக வாடகை கொடுத்துத் தங்குவதைத் தவிர்த்து, புறநகர்ப் பகுதிகளான யலஹங்கா, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் கனகபுரா சாலை போன்ற இடங்களைத் தேர்ந்தெடுக்குமாறு மற்றவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
View this post on Instagram
“>
அங்கு குறைவான வாடகையில் சிறந்த வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இவர்களின் இந்த வீடியோவிற்குப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்; சிலர் இவர்களின் அனுபவத்தைச் சரியாகப் புரிந்து கொண்டாலும், வேறு சிலர் குறிப்பிட்ட பகுதிகளைக் குறை கூறுவது தவறு என்று தங்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பெங்களூரு போன்ற நகரங்களில் வீடு தேடுபவர்கள் மத்தியில் கவனிக்க வேண்டிய ஒரு விவாதமாக மாறியுள்ளது.
