அமெரிக்காவில் 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கடும் கோபத்தில் இருந்தபோது வாழைப்பழம் நிரப்பப்பட்ட ஆணுறையை  முழுவதுமாக விழுங்கிய வினோதமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் எட்டு மணி நேரமாக கடுமையான வயிற்று வலி, மூச்சுத் திணறல், வாந்தி மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்குச் செய்யப்பட்ட சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், வாழைப்பழத்துடன் கூடிய ஆணுறை அவரது சிறுகுடலில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் அந்த நபர் செய்த விபரீதச் செயலை அவரிடமே கேட்டு உறுதிப்படுத்தினர்.

நீண்டகாலமாக மன அழுத்தப் பாதிப்புக்குள்ளாகி இருந்த அந்த நபர், கோபத்தில் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறியுள்ளார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், அவரது சிறுகுடலில் சிக்கியிருந்த அந்தப் பொருளை வெற்றிகரமாக அகற்றினர்.

மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அந்த நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக அமெரிக்காவின் ‘க்யூரியஸ்’ பத்திரிகை இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான செய்தியைப் பதிவு செய்துள்ளது. கோபத்தில் ஒருவர் செய்யும் இத்தகைய விபரீதச் செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.