மும்பையின் முலுண்ட் பகுதியில் இருந்து ஐரோலிக்குச் சென்ற ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் மிகுந்த போதையில் இருந்ததால், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கையில் வைத்திருந்த இரண்டு அலைபேசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தனது பாதுகாப்பிற்காகவும் அந்த ஆட்டோ ஓட்டுநர் பயணத்தின்போது வீடியோ பதிவு செய்துள்ளார்.

ஒரு பொறுப்புள்ள மனிதராகச் செயல்பட்ட அந்த ஓட்டுநர், போதையில் இருந்த அந்தப் பெண்ணை பத்திரமாக அவரது வீட்டில் சேர்த்தார். வறுமையிலும் நேர்மையுடன் அவர் நடந்து கொண்ட விதம், இன்றைய காலகட்டத்தில் அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் மனிதாபிமானத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். “பணத்தால் மட்டுமே ஒருவரை மதிப்பிட முடியாது, இவருடைய நேர்மை விலைமதிப்பற்றது” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

சமூகத்தில் நடக்கும் சில எதிர்மறையான சம்பவங்களால் ஒட்டுமொத்த மனிதகுலத்தையே தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதையும், இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதையும் இந்த நிகழ்வு உலகுக்கு உணர்த்தியுள்ளது. எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர் செய்த இந்தச் செயல், பலரது இதயங்களை வென்றுள்ளது.