சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மக்கள் நலப் பணிகளைப் பாராட்டிப் பேசினார். கலைஞர் பன்முகத் திறமை கொண்ட ‘தமிழ் ஞானத்தந்தை’ என்றும், திமுக எத்தகைய சரிவிலும் மீண்டெழும் ஒரு பீனிக்ஸ் பறவை என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி அர்ப்பணிப்புடன் உழைத்தவர் எனக் குறிப்பிட்ட அவர், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பது தொடர்பாக நள்ளிரவு 2:15 மணிக்குத் தன்னிடம் முதல்வர் பேசிய நெகிழ்ச்சியான சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.
“கரூர் சம்பவத்தில் அன்று FIR போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு..”- திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு#EVVelu | #CMVijay | #DMK | #TVK pic.twitter.com/vN4KTOec33
— PttvOnlinenews (@PttvNewsX) June 14, 2026
தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, தற்போதைய முதல்வர் விஜய், திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். சினிமா பின்னணி மூலம் மட்டுமே வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதனைச் சுட்டிக்காட்டினால் கோபப்படுவது நியாயமல்ல என்று சாடினார். மேலும், கரூரில் கடந்த காலங்களில் 41 பேர் பலியான துயர சம்பவத்தின் போது, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டிய தாயுள்ளமே தற்போதைய அரசியல் மாற்றத்திற்குக் காரணம் என்றார்.
அந்தச் சம்பவத்தின் போது, விஜய் மீது எஃப்.ஐ.ஆர். (வழக்கு) பதிவு செய்யக் காவல்துறை அதிகாரிகள் முற்பட்டதாகவும், ஆனால் ‘எந்த ஒரு தலைவனும் தன் தொண்டன் இறக்க வேண்டும் எனச் சதி செய்ய மாட்டான்’ எனக் கூறி விஜய் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டாம் எனத் தடுத்தவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், அன்றைக்கே வழக்குத் தொடரப்பட்டிருந்தால் இன்றைய அரசியல் நிலைமையே வேறாக இருந்திருக்கும் என்றும் எ.வ.வேலு தெரிவித்தார்.
