கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தாஸ் என்ற இளைஞர் இந்திய ராணுவத்திற்குத் தேர்வாகியும், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் பணியில் சேர முடியாமல் தவித்து வந்துள்ளார். அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு வருடமாகச் சான்றிதழ் தராமல் அவரை அலைக்கழித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த அந்த இளைஞர், இறுதியாக அலுவலகம் முன்பே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் தவெக அமைச்சரவையின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
விசிக ஏன் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்?
இந்திய ரானுவத்தில் வேலை கிடைத்தும் சாதிச் சான்றிதழ் கொடுக்காததால், வேலையில் சேர முடியாத நிலையால்,
1 வருடமாக சான்றிதழ் கேட்டு போராடிய நபருக்கு, தகவல் அறிந்த 1 நாளுக்குள் சான்றிதழ் வழங்கி இருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு 🩵❤ pic.twitter.com/Q9BdYoKMa6
— விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficial_TN) June 13, 2026
தகவல் அறிந்த உடனே களத்தில் குதித்த அமைச்சர் வன்னி அரசு, முழு விவரங்களையும் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொலைபேசியில் கூப்பிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அமைச்சரின் அதிரடி ஆக்ஷனால், ஒரு வருடமாக இழுத்தடிக்கப்பட்ட சாதிச் சான்றிதழ் வெறும் 24 மணி நேரத்திற்குள் அந்த இளைஞரின் கைக்குக் கிடைத்தது. இதனால் ராணுவப் பணியை இழந்திருக்க வேண்டிய இளைஞரின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டுள்ளது. “விடுதலை சிறுத்தைகள் ஏன் அதிகாரத்திற்கு வரணும்ன்றதுக்கு இதுதான் மிகச்சிறந்த உதாரணம்” என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் அமைச்சரின் இந்த அதிவேக ஆக்ஷனைத் தீவிரமாகப் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.
