எம்.எல்.ஏ-க்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் JCD பிரபாகரன், சட்டப்பேரவையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகள் சில சமயங்களில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட வழி வகுத்துவிடும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் அவரது இந்த உரை அமைந்திருந்தது.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு சிறிய புன்னகையால் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், தான் செல்கிற இடமெல்லாம் வெல்லும் இடம்தான் என்பதையும் முதல்வர் விஜய் நிரூபித்துக் காட்டியுள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் தற்போது நடப்பது “விஜய் மாடல் ஆட்சி” என்றும் சபாநாயகர் JCD பிரபாகரன் தங்களது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
