அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அடுத்தகட்ட அனல் பறக்கும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். மார்ச் 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர், அங்குள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 8-ஆம் தேதி பெருந்துறை மற்றும் பவானி ஆகிய தொகுதிகளில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

​கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படுவதால், ஈரோட்டில் இபிஎஸ் மேற்கொள்ளும் இந்த மூன்று நாள் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இப்போதே இபிஎஸ்-க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர். திமுக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியும், அதிமுகவின் சாதனைகளை விளக்கியும் அவர் இந்தப் பிரச்சாரத்தில் பேசவுள்ளார்