இருசக்கர வாகனத்தில் சென்ற நகைக்கடை தொழிலாளியை வழிமறித்த மர்ம நபர்கள், கத்தி முனையில் அவரிடமிருந்த தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் 2 கிலோ தங்கம் கொள்ளை போனதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.