மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் வேவூர் பகுதியில் உள்ள மஸ்டாங் எண்டர்பிரைசஸ் என்ற சாக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில், ஊதியம் மற்றும் வேலை நிபந்தனைகளை கோரி பெண் தொழிலாளர்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகம் எதுவும் செய்யாததால், தொழிற்சாலை வாயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், வயதான தொழிற்சாலை உரிமையாளர் தன்னுடைய காரை போராட்டக்காரிகளின் மீது இயக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதில் 27 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதை தொடர்ந்து, பல தரப்பினர் தொழிற்சாலை உரிமையாளரின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தொழிலாளர் உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.

“இது உரிமையாளர் ஆணவத்தின் உச்சம்” என தொழிலாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“>

 

பால்கர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது சிறிது நிம்மதியளிக்கின்றாலும், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம், தொழில்துறையில் பணியாற்றும் பெண்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய மரியாதை, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வியை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.