திமுக – காங்கிரஸ் இடையே ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்த மோதல் முற்றியுள்ள நிலையில், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், ஆட்சியில் பங்கு என்பது ஒன்றும் புதிய கோரிக்கை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு நெருக்கமான தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
”அனைத்து கட்சிகளுமே ஆட்சியில் தங்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பும்; அதில் தவறு ஏதுமில்லை. ஆனால், இப்போதைக்கு அனைவரின் இலக்கும் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே. வெற்றி பெற்ற பிறகு மற்ற விஷயங்களைப் பேசிக் கொள்ளலாம்” என அவர் முதிர்ச்சியான கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு பக்கம் TVK-வுக்கு ஆதரவு, மறுபக்கம் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற விளக்கம் என காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் இந்த இரட்டை நிலைப்பாடு, 2026 கூட்டணி குறித்த மர்மத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் விரிசல்….? தவெக பக்கம் சாய்கிறதா காங்கிரஸ்….? தமிழக அரசியலில் பெரும் திருப்பம்….!!
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸின் முடிவு சரிதானா? அல்லது திமுக தனித்துச் செயல்பட வேண்டுமா?
