தமிழக அரசியலில் நிலவி வரும் ஆட்சியில் பங்கு விவகாரம், தற்போது திமுக – காங்கிரஸ் இடையே ஒரு திறந்தவெளி வார்த்தைப் போராக மாறியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து அதிகாரப் பகிர்வு குறித்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கிரிஷ் ஷோடங்கர் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் அதிரடியாக நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வெறும் சினிமா ஆதரவா அல்லது வரவிருக்கும் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைக்கோர்ப்பதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் தீயாய் பரவி வருகிறது.
திமுகவின் பிடியில் இருந்து விலகி, புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யுடன் காங்கிரஸ் நெருக்கம் காட்டுவது அறிவாலய வட்டாரத்தைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ராகுல் காந்திக்கு நெருக்கமான தலைவர்களே விஜய்க்காகக் குரல் கொடுப்பது, காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணிக்கு செல்லத் தயாராகி வருவதையே உறுதிப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் உறுதியானால், 2026 சட்டமன்றத் தேர்தல் களம் யாரும் எதிர்பார்க்காத ஒரு ‘மெகா’ மல்டி-ஸ்டார் கூட்டணியைச் சந்திக்கும் என்பது மட்டும் உறுதி.
காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால் அது திமுகவின் வெற்றியைப் பாதிக்குமா?
