விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கக்கனூர் பகுதியை சேர்ந்தவர் தான் விக்னேஷ். இவர் ஐடிஐ படித்துவிட்டு டிரைவராக இருக்கும் நிலையில் செஞ்சு பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி விக்னேஷ் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் விக்னேஷ் அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதேபோன்று இளம்பெண்ணிடம் அவர் பல்வேறு முறை உல்லாசமாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கர்ப்பமான அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷிடம் கூறியுள்ளார். எனினும் விக்னேஷ் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இது தொடர்பாக இளம்பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விக்னேஷை அதிரடியாக கைது செய்தனர். இவ்வாறு இளம்பெண்ணை வாலிபர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
