டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அனைத்து நாய்களையும் காப்பகங்களில் அடைப்பதற்கு பதிலாக அவற்றைப் பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதியில் விடலாம் என உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
மேலும் ஆக்ரோஷமான ரேபிஸ் பாதிப்பு கொண்ட நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த சூழலில் கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளை தெரு நாய்கள் கடிக்க ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது சிறுவர்கள் சதூர்யமாக செயல்பட்டு நாய்களிடமிருந்து தப்பித்து விட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kerala Dog | CCTV | குழந்தைகளை வெறிகொண்டு துரத்திய தெரு நாய்கள் – அலறியபடி சிறுமி செய்த செயல்
#kerala #dog #cctv #thanthitv pic.twitter.com/hoANrsin3g
— Thanthi TV (@ThanthiTV) August 23, 2025
