மார்க்கண்டே கட்ஜு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், இந்தியா பிரஸ் கவுன்சில் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது பேஸ்புக் பதிவு சமீபத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் தான் பணியில் இருந்த போது தன்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கியதாக கூறியிருந்தார். அந்த பதிவு சர்ச்சையான நிலையில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது.
இதனால் அவர் தனது பதிவுக்கு மன்னிப்பு கோரி எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “நகைச்சுவையாக மட்டுமே சோசியல் மீடியாவில் அதை பதிவிட்டேன். உடனே அதை நீக்கி விட்டேன். எனது பதிவை தீவிரமாக எடுத்துக் கொண்ட பெண் வழக்கறிஞர்கள் அவர்களின் மனம் புண்பட்டதாக கூறினார்கள். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
