திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் புதூர் என்னும் பகுதியில் மூர்த்தி- ஜோதிமணி தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. இதில் மூர்த்தி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 16ஆம் தேதி ஜோதிமணி பள்ளப்பட்டி ஷா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூர்த்தி பொது இடம் என்று பார்க்காமல் தனது மனைவி ஜோதிமணியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து தாக்கினார். இதனால் பாதிக்கப்பட்ட ஜோதிமணி தனது கணவனின் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.