தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதாவது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கும் யானை சின்னத்தை தமிழக வெற்றிக்கழகம் தங்களுடைய கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்க பட்டிருந்த நிலையில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சி அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிதாக கட்சி தொடங்கும் நிலையில் ஒருவேளை நீதிமன்றம் யானை சின்னத்தை பயன்படுத்த தடை இல்லை என்று உத்தரவு வழங்கினால் அது அவருக்கும் சாதகமாக அமையும் என்பதால் பகுஜன் சமாஜ் கட்சி இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டது.
அதே நேரத்தில் மனுதாரராக பொற்கொடியையும் இந்த வழக்கில் சேர்த்து மீண்டும் வழக்கு தொடர்வோம் என்று அந்த கட்சியின் மாநில செயலாளர். ஆனந்தன் அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ள யானை சின்னத்திற்கும் தங்கள் கட்சியின் யானை சின்னத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறி பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
