மகாராஷ்டிரா மாநிலத்தின் கொந்தியா மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  லக்கி பாகதே (30) என்ற இந்த இளைஞர், எந்த பயிற்சியும் இல்லாமல் கோப்ரா பாம்பை பிடிக்க முயன்றுள்ளார். இதுபோன்ற சம்பவம் நிகழும்போது அருகில் இருந்தவர்கள் அவரை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.

சம்பவத்தின் வீடியோவில், பாம்பை கையில் பிடித்தபடி லக்கி பாகதே நடிக்கிறார். சில விநாடிகளில் அவர் இடது கை விரலில் கோப்ரா கடிக்க, இரத்தம் வழிந்தபடியே அவர் வலியால் துடிக்கும் காட்சி காணப்படுகிறது.

உடனடியாக அவரை அருகில் உள்ள தும்சார் சப்-டிஸ்ட்ரிக்ட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் நிலை மோசமடைந்ததால் பண்டாரா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இப்போது சமூக வலைதளங்களில் வீடியோவிற்கு ‘லைக்’ கிடைக்கும் என்ற நோக்கத்தில் பல இளைஞர்கள் தங்களுடைய உயிரையே விட்டு விடுகின்ற நிலை உருவாகியுள்ளது. பாம்பை போன்ற விஷ  உயிரினங்களை தன்னம்பிக்கையுடன் கையாள்வது எந்தவிதமும் வீரமல்ல.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே வருவதால், பொதுமக்கள் இதுபோன்ற ஆபத்தான செயற்பாடுகளிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.