ரயிலின் ஏசி பெட்டியில் அமர்ந்து கொண்டு இளைஞர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், 3 முதல் 4 இளைஞர்கள் ஏசி பெட்டியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ஒரு பாட்டிலில் இருந்து மற்றொரு பாட்டிலுக்கு மதுவை மாற்றிக்கொண்டும், அதனுடன் தின்பண்டங்களை வைத்துக்கொண்டும் கேளிக்கையில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.

சக பயணிகள் பயப்படும் சூழலில், எந்தத் தயக்கமும் இன்றி அவர்கள் இந்தச் செயலைச் செய்ததுடன், அதை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர். ரயிலை ‘பார்’ போல மாற்றிய இவர்களின் இந்தச் செயல், பயணிகளின் பாதுகாப்பையும் அமைதியையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ரயில்வே சேவை இது குறித்துப் பதிலளிக்கையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தப் பயணம் குறித்த விவரங்களை (PNR எண், பயண நேரம்) வழங்குமாறு கோரியுள்ளது.

“>

 

மேலும், “இவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், அப்போதுதான் மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டார்கள்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆவேசத்தைக் கமெண்ட் பிரிவில் கொட்டி வருகின்றனர்.

பொது போக்குவரத்துச் சேவைகளில் இத்தகைய ஒழுங்கீனமான செயல்களைத் தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இன்னும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.