தன் சொந்த தம்பியின் மகளென்று கூடப் பார்க்காமல் 7 வயது பச்சிளம் சிறுமிக்கு சாக்லேட் ஆசை காட்டி, கடத்தி சீண்ட முயன்ற 68 வயது முதியவரின் கொடூர புத்தி ஒட்டுமொத்தப் பகுதி மக்களையும் உறைந்து போகச் செய்துள்ளது. முகமது யூசுப் என்ற அந்த முதியவர், சிறுமி தனியாக இருப்பதை நோட்டமிட்டு, அவளுக்கு சாக்லேட் தருவதாகக் கூறி ஆசை வார்த்தைகள் பேசி தனது கடைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி உள்ளே சென்றவுடன் கடையின் கதவை மூடிய அந்த மிருகம், பச்சிளம் குழந்தையின் உடலுறுப்புகளை வர்ணித்து அநாகரீகமாகப் பேசத் தொடங்கியுள்ளது.

​தாத்தா வயதில் இருக்கும் நபரின் இந்த வக்கிரமான செயலால் பயந்து நடுங்கிய அந்தச் சிறுமி, பயத்தில் கதறி அழத் தொடங்கியுள்ளாள். நல்வாய்ப்பாக, கடையின் வெளிப்பகுதியில் தன் மகளைத் தேடிக் கொண்டிருந்த அவளது தாயின் காதுகளில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாகச் செயல்பட்ட அந்தத் தாய், சற்றும் யோசிக்காமல் கடையின் கதவைத் திறந்து உள்ளே பாய்ந்து, வக்கிர மிருகத்தின் பிடியில் இருந்து தன் மகளைப் பத்திரமாக மீட்டுள்ளார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களிடையே கடுமையான எச்சரிக்கையையும், அந்த முதியவர் மீதான கடும் கோபத்தையும் இந்த அதிர்ச்சிச் சம்பவம் இணையத்தில் கிளப்பியுள்ளது.