அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை அதிமுக  முன்னாள் உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மந்தைவெளி என்ற இடத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரையும்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாக பேசியதாக தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரியின் அடிப்படையில் தன் மீது பல்வேறு பிரிவிவுகளில் வழக்குகளை பதிவு செய்திருப்பதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்றும்,  எனவே தமக்கு முன்சாமியின் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் குமரகுருவிற்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையினரிடம் முறையான அனுமதி வாங்கி,  ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி,  அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நிபந்தனை விதித்து,  முன் ஜாமீன் வழங்கி உள்ளனர். முன்ஜாமின் நிமிர்ந்தனையை நிறைவேற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.