சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லக்குட்டிகாடு பகுதியில் குணசேகரன்(29) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குணசேகரன் காமராஜர் நகர், தாதகாப்பட்டி கேட் ஆகிய பகுதிகளில் இருக்கும் தெருக்களில் சுற்றி திரிந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த நபர் மோட்டார் சைக்கிளை திருட வந்ததாக நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குணசேகரன் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.