இந்தியாவிற்கு வருகை தந்த சிங்கப்பூர் நாட்டவரிடம், மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் “மேட் இன் சைனா?” வில் என்று ஒரு கேள்வியை எழுப்பினார். எதிர்பாராத இந்த கேள்வியைக் கேட்டதும் பதற்றமடையாமல், மிக அமைதியாகவும் கண்ணியமாகவும் அவர் அளித்த பதில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
அந்த உரையாடலின் போது, மும்பையைச் சேர்ந்த நபர் சிங்கப்பூர் நபரின் தோற்றத்தைக் கண்டு அவர் சீனாவைச் சேர்ந்தவரா என்ற எண்ணத்தில், ஆர்வக்கோளாறாக ‘மேட் இன் சைனா?’ என்று வினவினார். இதற்கு சற்றும் கோபப்படாமல் சிரித்த முகத்துடன் பதிலளித்த அந்த சிங்கப்பூர் நபர், தாம் சீன வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என்பதைத் தெளிவாக விளக்கினார்.
See this Instagram video by @sukasblood https://t.co/K0evBR0D9m
“>
தோற்றத்தை வைத்து மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தைத் தீர்மானிக்க முடியாது என்பதையும், இன வம்சாவளிக்கும் குடியுரிமைக்கும் உள்ள வித்தியாசத்தையும் மிக நாகரிகமான முறையில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் அந்த சிங்கப்பூர் நபரின் பொறுமையையும் முதிர்ச்சியையும் பாராட்டி வருகின்றனர்.
சங்கடமான ஒரு சூழலிலும் கோபப்படாமல், அன்பான மற்றும் தெளிவான விளக்கத்தின் மூலம் மற்றவர்களுக்குப் புரியவைத்த அவரின் அணுகுமுறை பலரைக் கவர்ந்துள்ளது. அதே வேளையில், பிற நாட்டின் கலாச்சாரங்களையும் மக்களையும் பற்றிப் பேசும்போது சரியான புரிதலோடும் மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
