கார்னிவல் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் செய்த அருவருப்பான செயல், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் குறிப்பிடப்பட்ட இந்த வீடியோவில், உணவகத்தில் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து உணவருந்தும் பெண் ஒருவர், தனது ஒரு காலை மற்றொரு காலின் மீது தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்துள்ளார். உணவருந்தும் போதே, வரண்டு தோல் உரிந்த நிலையில் இருக்கும் தனது பாதத்தின் அடியை அவர் கைகளால் தொடர்ந்து சொறிகிறார்.

பின்னர், காலில் இருந்து உதிர்ந்த தோல் துகள்களைத் தனது ஆடையில் இருந்து தட்டிவிட்டு, உடனடியாக அதே கையால் தட்டிலிருந்த உணவை எடுத்துச் சாப்பிடுகிறார். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த மற்றொரு வீடியோ நெட்டிசன்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில், அந்தப் பெண்மணி உணவருந்தப் பயன்படுத்தும் ஸ்பூன் அல்லது ஃபோர்க் கரண்டியைக் கொண்டே தனது பாதத்தைச் சொறிவதும், பின்னர் அதே கரண்டியை மீண்டும் மேஜை மீது வைப்பதும் பதிவாகியுள்ளது. பொது இடங்கள் மற்றும் உணவகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைச் சுகாதார நடைமுறைகளை முற்றிலும் புறக்கணித்து அந்தப் பெண் நடந்து கொண்ட விதம், இணையவாசிகளிடையே கடும் கோபத்தையும் அருவருப்பையும் கிளப்பியுள்ளது.

இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான சமூக வலைதளப் பயனர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். “இப்படிப்பட்டவர்கள் பஃபே முறையில் பரிமாறப்படும் உணவுகளை இதே கைகளால் தொட்டிருப்பார்கள் நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது” என்றும், “இனிமேல் உணவகங்களுக்குச் செல்லும்போது வீட்டிலிருந்தே சொந்தக் கரண்டிகளைக் கொண்டு செல்ல வேண்டும் போலிருக்கிறது” என்றும் பலரும் கவலையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சொகுசுக் கப்பல்கள் மற்றும் பொது உணவகங்களில் அதிகளவிலான மக்கள் ஒன்றாகச் சாப்பிடுவதால், இத்தகைய சுகாதாரமற்ற செயல்கள் நோய் தொற்றுகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறி, பொது இடங்களில் தனிநபர் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

“>