இன்றைய காலக்கட்டத்தில் வீட்டின் அருகில் உலாவும் விலங்குகளுக்கு உணவளிப்பது பலரின் வழக்கமாக உள்ளது. இருப்பினும், அது சில நேரங்களில் பக்கத்து வீட்டாருடன் தேவையற்ற வாக்குவாதங்களுக்கும் மோதல்களுக்கும் வழிவகுத்துவிடுகிறது.
அதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது குடியிருப்பு பகுதியில் உள்ள குரங்குகளுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கி வந்த பக்கத்து வீட்டுக்காரர்களிடம், ஒரு பெண்மணி மிகவும் கோபமடைந்து காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குரங்குகளுக்கு உணவு வழங்குவதால் தங்கள் பகுதியில் தொல்லைகள் அதிகரிப்பதாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த பெண்மணி மிகக் காட்டமாக எச்சரிப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
மேலும் “இனிமேல் அந்த குரங்குகளுக்கு உணவளிக்காதீர்கள்!” என்று ஆவேசமாகக் கத்தும் அந்த பெண்மணி, இதனால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்படும் அசௌகரியங்களை அடுக்கிக்கொண்டே போகிறார். எதிர்தரப்பினர் அவருக்குப் பதிலளிக்க முயன்றபோதிலும், அந்தப் பெண்மணியின் கடுமையான எதிர்ப்பால் அந்த இடமே பெரும் பரபரப்படைந்தது.
விலங்குகளுக்கு உணவளிப்பது மனிதநேயமான செயலாகப் பார்க்கப்பட்டாலும், அது குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகள் போன்ற வனவிலங்குகளின் வருகையை அதிகரித்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறுவதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், விலங்கினங்களின் பசியைப் போக்குவதில் தவறு ஏதும் இல்லை என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, குரங்குகளுக்கு உணவளிப்பது சரியா தவறா என்ற விவாதத்தை நெட்டிசன்களிடையே எழுப்பியுள்ளது.
See this Instagram video by @zindagi.gulzar.h https://t.co/1NOEfFprZZ
“>
