குருகிராமில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில் நின்றுகொண்டிருந்த 24 வயது இளைஞர் மீது திடீரென பாஸ்கெட்பால் கம்பம் சரிந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில், இளைஞர் ஒருவர் பாஸ்கெட்பால் மைதானத்தில் சாதாரணமாக நின்றுகொண்டிருப்பதும், எதிர்பாராதவிதமாக அதன் இரும்பு கம்பம் அடியோடு சாய்ந்து அவர் மீது பலமாக விழுவதும் தெளிவாகத் தெரிகிறது.
A 24-year-old man suffered three spinal fractures after a basketball pole collapsed on him in Gurugram’s Antriksh Heights Buyers society while he was playing on Sunday evening. The family of the injured man has alleged gross negligence in the maintenance of common facilities. pic.twitter.com/0Eq9Y4HHx7
— Vani Mehrotra (@vani_mehrotra) July 21, 2026
“>
மைதானத்தின் பராமரிப்புக் குறைபாடு மற்றும் தரமற்ற கட்டுமானமே இந்த விபத்திற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் குடியிருப்புவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், சிறுவர்கள் விளையாடும் இடங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கம்பங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டதா, இதில் யாருடைய அலட்சியம் உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்பு வளாகங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
