ஜாலியாக ஊர்சுற்றக் கிளம்பும் சொகுசு கப்பல் பயணங்களில் பல சுவாரசியமான விஷயங்களை பார்த்திருப்போம். ஆனால், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, ஒட்டுமொத்த பயண பிரியர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. காரைக்கால் அல்லது மற்ற கடல்வழிப் பயணங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பயணிகளின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
View this post on Instagram
அந்த வைரல் வீடியோவில், பிரபல கர்னிவல் க்ரூஸ் சொகுசு கப்பலில் பயணிக்கும் ஒரு பெண், உணவருந்திக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அவருக்கு தனது காலில் அரிப்பு எடுக்கவே, சற்றும் யோசிக்காமல் தனது செருப்பை கழட்டிவிட்டு எனப்படும் உதிர்ந்துபோகும் செதில்களுடன் கூடிய தனது சொறிந்துபோன காலை அந்த கையாலேயே சொரிகிறார்.
அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், காலைச் சொறிந்த அதே கையை எங்குமே துடைக்கவோ அல்லது கழுவவோ செய்யாமல், நேராக மேஜையில் இருந்த உணவை மீண்டும் அதே கையால் அள்ளி சாப்பிடத் தொடங்குகிறார். பக்கத்தில் இருந்தவர்கள் இதனைப் பார்த்து அதிர்ந்து போயிருந்தாலும், அந்தப் பெண் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது வேலையைத் தொடர்ந்து செய்வது பார்ப்பவர்களுக்கே நெஞ்சைக் குமட்டுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களது கடும் எதிர்ப்புகளையும் அதிர்ச்சிகளையும் கொட்டி தீர்த்து வருகின்றனர். பொதுவெளியில் நாம் பயன்படுத்தும் சுகாதாரம் குறித்தும், மற்றவர்களின் முன்னிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்தச் சம்பவம் சமூகத்தில் ஒரு பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.
