விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கிராமத்தில் அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யாக்கண்ணு பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.