வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகள், யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் நெல்லிப்பட்லா வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான பாஸ்மார், அரவட்லா மலை கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி உள்ளது.

இதனால் பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பகுதிக்கு அருகே வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இரவு நேரம் விளை நிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கர்நாடக மாநிலங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.