புவியில் கிடைக்கும் உலோகங்களில் மிக குறைவாக கிடைப்பது தங்கம் மட்டும் தான். நிலத்தடியில் இருந்து தங்கம் எடுப்பது மிகவும் கடினமானது மற்றும் வேலைப்பளு மிக்கது. தங்கத்தின் விலையானது, அதை பிரித்தெடுக்கும் செலவு மற்றும் மக்களிடையே உள்ள தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

தங்கம் துரு பிடிக்காது. மேலும் ஆக்சிஜனேற்றம் அடையாது. அதன் எடை நிலையானது. மற்ற உலோகங்களை விட தங்கம் மனித நுகர்வுக்கு ஏற்றது. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகமாகும்.