ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து ஒரே நேரத்தில் 570 கற்களை அகற்றினர். வயிற்றில் இவ்வளவு கற்கள் இருப்பது என்பது மிகவும் அரிது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வயிற்றில் பல்லாயிரக்கணக்கான கற்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.