மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி ‌ என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் விகாஸ் மட்டும்  தனியாக இருந்துள்ளார். அப்போது நீண்ட நேரமாக விகாஸ் செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவருடைய நண்பர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே அவர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது விகாஸ் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு ஏற்கனவே விகாஸ் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.