தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பேருந்து பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி நாட்களில் மட்டும் பேருந்து சேவை வழங்கப்படும்.
இந்த பேருந்துகள் காஞ்சிபுரம் வழியாக திருவண்ணாமலையை சென்றடையும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் வருகின்ற மே 23 முதல் அமலாகும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் புறப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அப்போதைய சூழலை பொறுத்து நிர்ணயிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
