அதிமுகவின் வடசென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் ஆர்.எஸ். ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களைக் முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

​வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகம் தனது அமைப்பைப் பலப்படுத்தி வரும் நிலையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் முன்னணி தலைவர்களும் தொடர்ந்து தவெகவை நோக்கிப் படைஎடுத்து வருகின்றனர்.

​வடசென்னையில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு மாவட்டச் செயலாளரே தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்துள்ளது, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியல் களத்தை மேலும் விறுவிறுப்படையச் செய்துள்ளது.