ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியில் உள்ள பிரபலமான ஷேர்-எ-பஞ்சாப் உணவகம், பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும் சேதமடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், உணவகத்தின் முன்பகுதி மட்டும் அப்படியே நிற்க, மற்ற பகுதிகள் முழுவதும் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
வட இந்திய உணவுகளுக்கு பெயர் பெற்ற இந்த உணவகம், பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் உணவு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
tragic situation in Manali, Himachal Pradesh
In Manali, the iconic Sher-e-Punjab restaurant was heavily damaged by the strong floodwaters. Most of the building was washed away, leaving only the front gate wall standing pic.twitter.com/9HW9SS6LbO
— Go Himachal (@GoHimachal_) August 26, 2025
பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்த இந்த உணவகம், திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் சேதமடைந்தது. மணாலி-சண்டிகர் நெடுஞ்சாலை உட்பட மாநிலத்தில் 795 சாலைகள் மூடப்பட்டுள்ளன, இதில் மண்டி மாவட்டத்தில் 289 சாலைகளும், சம்பாவில் 214 சாலைகளும், குலுவில் 132 சாலைகளும் மூடப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக கங்கரா, சம்பா, லலித் மற்றும் ஸ்பிதி மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், உனா, ஹமிர்பூர், பிலாஸ்பூர், சோலன், மண்டி, குலு மற்றும் ஷிம்லாவுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
