பானிபட் நகரில் பகல்நேரத்தில் பரபரப்பான தெருவில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, பாதசாரிகளாக சாலையைக் கடந்து சென்ற பெண்களை பின்னால் இருந்து தவறாகத் தொட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காட்சி, அங்கிருந்த ஒரு நபரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, பானிபட் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்தது.
Panipat में सरेराह छेड़ी जा रही महिलाएं, बाइक सवार मनचलों की करतूत कैमरे में कैद.. वीडियो वायरल pic.twitter.com/5UmZUeC4NY
— Amandeep Pillania (@APillania) August 26, 2025
வைரலான வீடியோவில், பரபரப்பான சாலைக் குறுக்குவெட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், பெண்களைத் தவறாகத் தொட முயன்று, பின்னர் வேகமாக தப்பியோடுவது தெளிவாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் கண்டனத்தைப் பெற்றது. பானிபட் காவல்துறை, இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, சில மணி நேரங்களில் குற்றவாளிகளைப் பிடித்து, தண்டனை வழங்கியது.
#बैड_टच करने वाले मनचलों पर पानीपत पुलिस की त्वरित कार्रवाई
सड़क पार कर रही युवती को पीछे से की छूने की कोशिश, वायरल वीडियों के आधार पर पुलिस ने तुंरत संज्ञान लेते हुए चंद घंटों मे दोनों आरोपियों को किया काबू
महिलाओं की सुरक्षा के लिए पुलिस तत्पर; SP भूपेंद्र सिंह IPS@cmohry pic.twitter.com/DqYk46eeBO
— Panipat Police (@PANIPAT_POLICE) August 25, 2025
காவல் நிலையத்துக்கு வெளியே குற்றவாளிகள் நொண்டியபடி செல்லும் வீடியோவை காவல்துறை தங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, பெண்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ளது.
