செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறதுல முதல்ல மத்திய பிரதேசம்,  இரண்டாவது நானு,  மூன்றாவது கர்நாடகா. நாங்க இரண்டு மாநிலமும் தென் மாநிலம் இங்க தான் இருக்கோம்.  எனக்கு என்ன கொடுத்திருக்க நீ ? உட்கார்ந்துகிட்டு….  சரி அம்மா வந்தாங்க அல்லவா  நிதியமைச்சர்….  நானும் தான் களத்துல நின்னேன்.

நான் ஊர் ஊரா போய் மக்களுக்கு உதவி செஞ்சிட்டு இருந்தேன். நீங்க என்ன பண்ணீங்க ? சாலையில் ஒரு ஓரத்தில் பதாகை வச்சு, அங்கங்க பாதிக்கப்பட்ட இடங்களில் படங்கள் எடுத்துட்டு வந்துட்டு… அந்த படங்களை பெரிய அளவில் மாட்டி,  ஒரு பந்தல போட்டு….  அதுல என்ன பார்வையிட்டு போறது…. அங்க இருந்துட்டு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்க சொல்லலாமே,  எதுக்கு வரீங்க அப்புறம் ? இதே தான் அவரும் பண்ணாரு…

ஓகி புயல்ல அப்படியே படத்தை ஒட்டி வச்சிருந்தாங்க. அப்படியே பாத்துட்டு போயிட்டாரு. அதுக்கு எதுக்கு நீங்க வரிங்க ? இமெயில் இருக்கு, இன்ஸ்டாகிராம் இருக்கு, இன்டர்நெட் இருக்கு, whatsapp இருக்கு, போட்டு விடுங்க பாக்குறேன் என்றால்,  அங்கே இருந்து பார்த்துக்கலாமே… எங்கள மாற்றம் தாய் இல்லை. அவுங்களை பொறுத்தவரை  எங்களுக்கு உயிரே கிடையாதா?  நாங்க உயிரே கிடையாது. அவனுக்கு நான் ஒரு ஓட்டு அவ்வளவுதான் என விமர்சித்தார்.