தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்து என்ற 83 வயது நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் உடல் நலக்குறைவினால் இருந்துள்ளார். அப்போது அவரது மகன் சுடலைமணி (51) அங்கு சென்று தன்னுடைய தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். ஆனால் முத்துவும் அவரது மனைவி ரோஜாவும் (68) தங்கள் மகனுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மகன் தன்னுடைய அம்மா அப்பாவை கம்பை எடுத்து கோபத்தில் அடித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ரோஜா படுகாயம் அடைந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முத்துவுக்கு ஆயுள் தண்டனை, 3,000 ரூபாய் அபராதம், 3 வருடங்கள் கடுங்காவல் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கை திறம்பட விசாரித்த போலீசாருக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்தது.
