முதலமைச்சர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் தான் நடித்த முக்கியமான காட்சிகள் அனைத்தையும் படக்குழு நீக்கிவிட்டதாகக் கூறி, பிரபல நடிகை ஆனந்தி வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இதில் நடிப்பதையே மிகப்பெரிய பெருமையாகக் கருதியதாக ஆனந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது அவரது கடைசித் திரைப்படம் என்பதால் இனிமேல் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை என்ற ஏக்கத்தில் இப்படத்தில் தன் பங்களிப்பு பெரிதும் இருக்கும் என எதிர்பார்த்திருந்தாராம்.

ஆனால், இறுதிப் படத்தில் தன் காட்சிகள் இடம்பெறாதது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

மேலும், இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிடுவார்களா அல்லது அப்படியே விட்டுவிடுவார்களா என்ற ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.