சென்னை விமான நிலையத்திற்கு வருகைதந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரது மகள் ஐஸ்வர்யா ‘லால் சலாம்’ பட இசை வெளியீட்டு விழாவில் ‘சங்கி’ குறித்து பேசிய கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்டவார்த்தை என்று பொருள்பட ஐஸ்வர்யா பேசவில்லை. ஆன்மீகவாதியாக மத நல்லிணக்கத்துடன் இருக்கும் தனது தந்தையை சங்கி என குறிப்பிடக்கூடாது என ஐஸ்வர்யா பேசினார்” என விளக்கமளித்தார்.