இன்று செய்தியாளர்களிட பேசிய எடப்பாடி பழனிசாமி,  மத்திய அரசாங்கம் நீதி எல்லாம் கொடுத்திருக்கிறது. அதையாவது முறையாக பயன்படுத்த வேண்டும். அதோடு எப்போ பாத்தாலும் 4000   கோடியில் வடிகால் வசதி செய்து இருக்கிறோம். 20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் கூட ஒரு சொட்டு தண்ணீர் இருக்காதுன்னு சொன்னாங்க. இப்ப ஒரு சொட்டு தண்ணி இல்ல..  அவுங்க  சொன்னது கரெக்ட் தான். ஒரு சொட்டு தண்ணி நிக்கல. ஒரு குளம் போல தண்ணீர் தேங்கி நிக்குது.

எங்க பாத்தாலும் தண்ணி நிக்குது. அதுக்கு தான் வெள்ளை அறிக்கை கேட்டிருந்தேன்.   திமுக அரசு இந்த வடிகால் வசதி செய்கின்ற திட்டம் எந்த நிலையில் இருக்கு? முழுதா வடிகால் வசதி செஞ்சுட்டாங்களா ? என மக்கள் தெரிந்து கொள்வதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று சொன்னேன்.

திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே நாங்க எந்த காலத்துல எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கிறோம். அதுக்கு வடிகால் வசதி செய்து இருக்கிறோம் அப்படின்னு வீரவசனம் பேசிட்டு இருந்தாங்க. ஆனால்  இன்னைக்கு எங்க பாத்தாலும் தண்ணி தேங்கி இருக்கிறது. தண்ணீர் தேங்காத இடமே கிடையாது என தெரிவித்தார்.