வோடோபோன் வழங்கக்கூடிய ரூபாய்.99 ரீசார்ஜ் பிளானின் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். கம்மியான விலையில் வோடோபோன் வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய புல் டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டாவையும் பயன்படுத்திக்கொள்ள இயலும். இந்த ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வினாடிக்கு 2.5 பைசா எனும் விகிதத்தில் வழங்குகிறது.

எனினும் இதில் sms சேவை வழங்கப்படவில்லை. அண்மையில் ஏர்டெல் தன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் வழங்கி வந்த ரீசார்ஜ் பிளானை ரூ.155 ஆக மாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வோடோபோன் நிறுவனம் ஏர்டெல்லுக்கு போட்டியாக தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.99 விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.