தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, அரசு நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் காரணமாகத் தமிழ்நாட்டில் ஹான்ஸ், கூல் லிப் போன்றவற்றின் புழக்கம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெக அரசின் இந்த அதிரடி கெடுபிடி காரணமாகத் தங்களுக்கு ஹான்ஸ், கூல் லிப் போன்றவை எளிதாகக் கிடைக்கவில்லை என்று இளைஞர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசும் வீடியோ ஒன்று எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக ஆட்சியில் சட்டதிட்டங்கள் மற்றும் போலீஸ் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளதை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
இன்றைய இளைஞர்களை Has, Coollip கொடுக்காமல் இம்சிக்கும் #SofaModel அரசு 😡
எப்படி அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று #திராவிட_மாடல் அரசை பார்த்து தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் எங்களை ஆட்சியில் இருந்து விரட்டிய Gen z இற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். pic.twitter.com/KBuZogn6vw
— Udhai (@UdhaystalinOffl) June 14, 2026
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசும் இளைஞர், “முன்னாடி எல்லாம் எங்கள் ஊரிலேயே மிக எளிதாகக் கிடைத்து வந்த ஹான்ஸ், கூல் லிப் போன்றவை, விஜய் சிஎம் ஆனதற்குப் பிறகு இப்போதெல்லாம் எங்குமே கிடைக்க மாட்டேங்குது; இதற்காகப் பல கிலோமீட்டர் தொலைவுகள் கடந்து அலைந்து திரிந்து தேடிப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இளைஞரின் இந்த ஆதங்க வீடியோ, தமிழ்நாட்டில் ஹான்ஸ், கூல் லிப் புழக்கத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள கறாரான நிர்வாக மாற்றத்தைக் காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்
