மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிச் விழுந்தார்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில், அங்கு பணியில் இருந்த பெண் பேருந்து நடத்துநர் சங்கீதா பல்வே உடனடியாகச் செயல்பட்டு, அந்தப் பயணிக்கு முதலுதவியாக மார்பக அழுத்த சிகிச்சை அளித்தார். இதனால் மயக்க நிலையிலிருந்த பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது.
உயிருக்குப் போராடிய பயனுக்காக 108 அவசர ஊர்திக்குத் தகவல் அளிக்கப்பட்ட போதிலும், ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதனைக் கண்டு தாமதிக்க விரும்பாத நடத்துநர் சங்கீதா மற்றும் அங்கிருந்தவர்கள், துரிதமாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Chhatrapati Sambhajinagar – A woman passenger suffered a heart attack at the bus stand in Sambhajinagar, but was saved by the quick thinking of woman conductor Sangita Palwe.Palwe immediately administered CPR to the passenger. Despite calling 108, the ambulance did not arrive on… pic.twitter.com/cnsaijf2hs
— NextMinute News (@nextminutenews7) August 3, 2026
“>
குறித்த நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய பெண் நடத்துநரின் மனிதநேயச் செயலையும் அவரது விவேகத்தையும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
