சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் மிகக் கொடூரமான விபரீத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு படிக்கும் இரண்டு பள்ளி மாணவிகள், தங்களது சக தோழி ஒருவரைப் பள்ளியின் மொட்டை மாடிக்கு (கூரை பகுதி) அழைத்துச் சென்று, அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யத் துணிந்துள்ளனர்.

மேலும், அந்தத் தோழியைத் தள்ளிவிட்ட பிறகு, அவர் மொட்டை மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி, இந்த விபரீதக் கொடூரத்தைத் தற்கொலை வழக்காக மாற்றுவதற்கும் அந்த மாணவிகள் பயங்கரமான மாஸ்டர் பிளான் போட்டுள்ளனர். ​ஆனால், மாணவிகளின் இந்த நெஞ்சைப் பதற வைக்கும் கொடூரமான தற்கொலை நாடக முயற்சி கடைசி நேரத்தில் அங்கிருந்த ஆசிரியர் ஒருவரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மொட்டை மாடியில் மாணவிகள் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்ததைச் கடைசி நொடியில் கவனித்த அந்த ஆசிரியர், உடனே ஓடிச் சென்று அந்தப் பெண்ணை விபரீதத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றியுள்ளார். பிஞ்சு மனசுல இவ்வளவு கொடூரமான வன்மமா என்று ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ள இந்த அதிர்ச்சிகரமான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.