“என் பெத்த மகளையே கடிக்கிற அளவுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படிப் பண்ணுவீங்க, இனிமே உங்களுக்கு மன்னிப்பே கிடையாது!” என்று சொல்லும் அளவுக்குச் சீனாவில் இரண்டு செல்லப் பிராணிகள் தங்களுக்குள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட போது, எதிர்பாராத விதமாக ஒரு நாய் தனது முதலாளியின் மகளைக் கடித்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் போர்க்களமாக மாற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஒரு வீட்டில்  இரண்டு வளர்ப்பு நாய்கள் திடீரென பயங்கரக் கோபத்துடன் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளன. அப்போது நிலைமையைக்கட்டுப்படுத்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக அந்த நாய்களில் ஒன்று தன் முதலாளியின் சிறுமியான மகளைக் கொடூரமாகக் கடித்துள்ளது.

 

“>

தன் கண் முன்னாலேயே மகள் தாக்கப்படுவதைக் கண்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்தச் சிறுமியின் தாய், சற்றும் யோசிக்காமல் உடனடியாகத் தனது காலிலிருந்த செருப்பைக் கழற்றி, அந்த நாய்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் அங்கிருந்த ஒட்டுமொத்த சூழலுமே  போர்க்களமாக மாற்றியுள்ளார்.

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் துணிகரச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கான வியூஸ்களை அள்ளி, நெட்டிசன்கள்மத்தியில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.