சாம்சங் தன் Galaxy S23 சீரிஸ்-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் 3 புது ஸ்மார்ட் போன்களை அறிமுகமாக்கி உள்ளது (Galaxy S23, Galaxy S23+ மற்றும் Galaxy S23 Ultra ). Galaxy Unpacked நிகழ்வில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 3 மாடல்களிலும் Gorilla Glass Victus 2 பாதுகாப்பு உள்ளது. இத்தொடரின் 3 ஸ்மார்ட்போன்களும் Snapdragon 8 Gen 2 செயலியுடன் வருகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சலுகைகளை நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது.
Samsung Galaxy S23 சீரிஸ் விலை
முதலில் இத்தொடரின் மிகவும் சக்தி வாய்ந்த தொலைபேசியான Samsung Galaxy S23 Ultra, இந்தியாவில் 3 கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் 12gp ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலையானது ரூ.1,24,999 ஆகும். அதே சமயத்தில் அதன் 12gp ரேம்+ 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூபாய்.1,34,999 ஆகும். அதேபோல் டாப் வேரியண்ட் ரூ. 1,54,999 ஆகும். இவற்றில் பயனாளர்கள் 12GB ரேம் +1டிபி ஸ்டோரேஜை பெறுவர். Galaxy S23+ 2 கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் 8gp ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூபாய்.94,999 ஆகும். அதேசமயத்தில் அதன் 8GP ரேம்+512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலையானது ரூ.1,04,999 ஆகும்.